Sep 8, 2026
Thisaigal NewsYouTube
தேசிய செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் ஒட்டுமொத்த சாம்பியன்; தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்விழா ஒரு முக்கிய தளம் என பழனி சுப்பையா பெருமிதம்
தமிழ் பள்ளி

தேசிய செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் ஒட்டுமொத்த சாம்பியன்; தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்விழா ஒரு முக்கிய தளம் என பழனி சுப்பையா பெருமிதம்

Share:

தேசிய அளவிலான செந்தமிழ் விழா, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்கும் முக்கிய தளமாக விளங்குகிறது என மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகத்தின் தேசியத் தலைவர் பழனி சுப்பையா தெரிவித்துள்ளார்.

பேராக், தைப்பிங்கில் நடைபெற்ற 10-ஆவது தேசிய செந்தமிழ் விழாவின் நிறைவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போட்டிகள் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர உதவுகிறது என்றார்.

இவ்வாண்டு போட்டிகளில், நெகிரி செம்பிலான் மாநிலம் ஒட்டுமொத்த சாம்பியனாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. சிலாங்கூர் இரண்டாம் இடத்தையும், போட்டியை உபசரித்த பேராக் மூன்றாம் இடத்தையும் பெற்றன. ஜோகூர், பகாங் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்கள் மனம் தளராமல், இதனை ஒரு கற்றல் வாய்ப்பாகக் கருதி தொடர்ந்து முயல வேண்டும் என அவர் ஊக்கமளித்தார்.

மேலும், 55,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கிய பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன், துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ, பேராக் மாநிலக் கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இத்தகைய விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் அவர் தமது உரையில் கேட்டுககொண்டார்.

Related News

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்