Sep 8, 2026
Thisaigal NewsYouTube
கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு-தனியார் கூட்டு முயற்சி அவசியம்:  அமைச்சர்த பட்லினா சீடேக் கூறுகிறார்
தமிழ் பள்ளி

கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு-தனியார் கூட்டு முயற்சி அவசியம்: அமைச்சர்த பட்லினா சீடேக் கூறுகிறார்

Share:

கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், வளர்ந்து வரும் சமூகங்களுக்கு ஏற்ப கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் தற்போதைய காலக்கட்டத்தின் முக்கியத் தேவையாகும் என்று கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

சிரம்பான், எம்.வி.வி சிட்டி நகரப் பகுதியில் அமையவிருக்கும் புதிய லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் பிரம்மாண்ட அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வருங்காலத் தலைமுறையினருக்கு மிகவும் சாதகமான, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதில் அரசாங்கம், கல்வித் துறை சார்ந்தவர்கள் மற்றும் தனியார் துறையினரின் கூட்டு முயற்சிகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் புதிய பள்ளித் திட்டம் பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

கல்வி, பொருளாதார வளர்ச்சி மற்றும் தரமான வாழ்க்கைமுறை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து பயணிக்கும் ஒரு நிலையான சமூகத்தை உருவாக்குவதே இந்த ஒருங்கிணைந்த நகரத்தின் நீண்டகால தொலைநோக்குத் திட்டமாகும் என்றும், அதற்கு இப்புதிய பள்ளி வளாகம் ஒரு மிக முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் கல்வி அமைச்சர் பட் லினா சிடெக் தனது உரையில் மேலும் விவரித்தார்.

Related News

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்