Aug 24, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுதல் பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50வது ஆண்டின் பொன்விழாவின் நோக்கம் .
தமிழ் பள்ளி

முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுதல் பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50வது ஆண்டின் பொன்விழாவின் நோக்கம் .

Share:

ஸ்லோகன்: தொண்ணூறு ஆண்டு ஒரு வரலாறு, ஐம்பது ஆண்டு ஓர் அடையாளம்

கெடா ஜித்ராவில் அமைந்துள்ள பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50வது ஆண்டின் பொன்விழா மிகவும் விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்த 50வது ஆண்டின் பொன்விழாவின் முக்கிய நோக்கமே முன்னாள் மாணவர்களை ஒன்று கூடுதல் மற்றும் அப்பள்ளிக்கு மண்டபம் ஒன்று தோற்றுவிப்பத்தற்கு நிதி திரட்டுவதே என்றார் பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் அ.ஜோன்சன் .

அண்மையில் பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50வது ஆண்டின் பொன்விழாவை முன்னிட்டு இரண்டு மிக பிரமாண்டமான நிகழ்வுகள் நடைபெற்றன .அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் லோ.தினேஷ் காளிகுமார் தலைமையில் அவரின் உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்களின் சார்பாக தீவன் சந்திரன் தலைமையில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுதல் நிகழ்வு அருகாமையிலுள்ள சுங் ஹுவா சீன ஆரம்பள்ளி மண்டபத்தில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தன. பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் படித்து முடித்து வெளியேறிய 1000 த்திற்கு மேற்பட்ட மாணவர்களே மீண்டும் ஒன்றிணைத்து பழைய நினைவுகளை உணர்வுபூர்வமாக் கொண்டு வரப்பட்டன.

மேலும், முன்னாள் மாணவர்களாக இருந்தாலும் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட பாயா கமுண்டின் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் திறந்தவெளி மண்டப கட்டுமானத்திற்கான நிதி திரட்டுவதே இந்த நிகழ்வின் மற்றொரு நோக்கமாகும்.இந்த 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் மற்றும் முன்னாள் மாணவர்களும் அணிச்சல் வெட்டித் தொடக்கி வைத்தனர். பொன் விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் தலைமையில் மரம் நடப்பட்டது.

ஜித்ரா பாயா கமுண்டின் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50 வது ஆண்டின் " பொன்விழா நினைவு மலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதுடன் இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இப்பொழுது நல்வழியில் அவர்களின் வாழ்கைப் பயணம் உள்ளது. அதேபோல் இப்பொழுது இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் தொழில்நுட்ப வசதிகளுக்காகவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்வத்தற்காக திட்டங்கள் கலந்துரையாடலில் இருப்பத்தாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்கள், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் , முன்னாள் தலைமையாசிரியர்களும், முன்னாள் ஆசிரியர்களும் மற்றும் அன்றயே கதாநாயகர்களாக எங்கள் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அலோஸ்டார், ஜித்ரா பாயா கமுண்டின் தோட்டத் தமிழ்ப்பள்ளயில் பயின்ற முன்னால் மாணவர்கள் எங்கு இருந்தாலும் இப்பள்ளியின் மண்டப கட்டுமானத்திற்குக் கைக்கொடுக்கும்படி அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு தினேஷ் காளிகுமார் கேட்டுக்கொண்டார்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு