Sep 8, 2026
Thisaigal NewsYouTube
தேசிய செந்தமிழ் விழா: தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதி
தமிழ் பள்ளி

தேசிய செந்தமிழ் விழா: தமிழ்ப்பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதி

Share:

மலேசியத் தமிழ் மொழி, நாட்டின் கலாச்சாரச் செழுமையை வலுப்படுத்தும் முக்கிய மொழிகளில் ஒன்றாகும் என்று கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

தைப்பிங்கில் நடைபெற்ற 10-ஆவது தேசிய செந்தமிழ் விழாவை நிறைவு செய்து உரையாற்றிய துணை அமைச்சர், தமிழ் இலக்கியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.

அத்துடன் வசதி குறைந்த மாணவர்களுக்கான ‘டியூஷன் மலேசியா மடானி’ திட்டம், பள்ளிகளுக்கான தளவாடப் பொருட்கள் மற்றும் குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு விவேக பலகை விநியோகம் போன்ற அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கினார். தமிழ்ப்பள்ளிகளின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் இது போன்ற போட்டி நிகழ்வுகளை நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொண்ர்வது முக்கியமான ஒன்றாகும் என்று தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான வோங் கா வோ உறுதியளித்தார்.

மாநிலக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வோங் கா வோ பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.

Related News

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்