கங்கார், ஜனவரி.07-
2015-ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய பெர்லிஸ், வாங் கெலியானில் (Wang Kelian) கண்டறியப்பட்ட மனிதக் கடத்தல் முகாம்கள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கில், 5 தாய்லாந்து பிரஜைகளுக்கு இன்று கங்கார் உயர் நீதிமன்றம் தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
2015-ஆம் ஆண்டு மே மாதம், தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகிலுள்ள வாங் கெலியான் காடுகளில் 28 தற்காலிக முகாம்களும், 139 புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமான முறையில் நடத்தப்பட்டதும், பலர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த ஐந்து பேரும் மலேசியாவிற்கு நாடு கடத்தப்பட்டு தற்போது தண்டனை பெற்றுள்ளனர்.
இவ்வழக்கு பெர்லிஸ், கங்கார் உயர் நீதிமன்றத்தில் Abazafree Abbas முன்னிலையில் நடைபெற்றது.








