சிப்பாங், ஆகஸ்ட்.10-
மலேசியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில், மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் 16வது தேசிய மாநாடு, சிப்பாங், தஞ்சோங் ரூ, அகாடமி கெனெகராஆன் மலேசியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, பண்பாட்டுக் காப்பு, முன்னாள் மாணவர் வலையமைப்பை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழ்க் கல்வியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு முன்னாள் மாணவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் எனச் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர். சமூக முன்னேற்றத்தில் முன்னாள் மாணவர் சங்கங்களின் முக்கியப் பங்கை இந்த மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
