Aug 24, 2026
Thisaigal NewsYouTube
பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்
தமிழ் பள்ளி

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்காக உற்சாகமாக நடைபெற்ற புதையல் வேட்டை: நிதி திரட்டும் முயற்சியில் 188 பங்கேற்பாளர்கள் ஆர்வம்

Share:

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்காக மலேசியத் தமிழ் நெறிக் கழகம் மற்றும் பள்ளியின் ஆசிரியர் கழகம் இணைந்து நடத்திய ‘புதையல் வேட்டை’ போட்டி இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை 7 மணிக்கு விளக்கக் கூட்டத்துடன் தொடங்கிய நிகழ்வை, 8 மணிக்கு கோலசிலாங்கூர் எம்.பி. டாக்டர் சூல்கிப்லியின் பிரதிநிதி சிவபாலன், தலைமையாசிரியர் திருமதி பெண்ணரசி மற்றும் கனல் வீரன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதில் 47 மகிழுந்துகளில் மொத்தம் 188 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இப்பயணம், பெஸ்தாரி ஜெயாவிலிருந்து தொடங்கி ஈஜோக் மற்றும் கோலா சிலாங்கூர் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. சாலைக் குறியீடுகளைக் கவனித்து சவாலான வினாக்களுக்கு விடைகாணும் வகையில் இந்தப் போட்டி அமைந்திருந்தது.

வெற்றியாளர்கள் விவரம்:

• முதலிடம்: குழு "பீனிக்ஸ்" (இராஜேந்திரன், கீதா) – RM 1,500 பரிசு.

• இரண்டாமிடம்: குழு "குலுலெஸ்" (கோகிலா, தவகுமார், மலர், சுமித்ரா) – RM 1,000 பரிசு.

• மூன்றாமிடம்: குழு "திவின் துர்போ" (பிரகாஷ், ரூபிண்டர், ஆர்யன், ஜெய்வன்) – RM 700 பரிசு.

தலைமையாசிரியர் திருமதி பெண்ணரசி பேசுகையில், "பங்கேற்பாளர்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கே வழங்கப்பட்டன" எனக் கூறி நன்றியைத் தெரிவித்தார். தமிழ் நெறிக் கழகத் தலைவர் திருமாவளவன், இது தங்களின் 3-வது நிதி திரட்டும் முயற்சி என்றும், மற்ற பள்ளிகளுடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு