Sep 27, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் டிவிகள்: கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ முக்கிய அறிவிப்பு
தமிழ் பள்ளி

தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் டிவிகள்: கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ முக்கிய அறிவிப்பு

Share:

மலேசியாவில் உள்ள சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த சிறப்புக் கல்வித் திட்டமான PPKI கீழ் பயிலும் மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு முதல் சீனம் மற்றும் தமிழ் மொழிப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மலாக்கா, ஆலோர்காஜாவில் நேற்று புதன்கிழமை தொடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான மடானி கல்வி சீர்த்திருத்தை நோக்கி, மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான டிஜிட்டல் தலைமைத்துவ கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை அமைச்சர் வோங் கா வோ இதனைத் தெரிவித்தார்.

2027-ஆம் ஆண்டுக்கான புதிய தேசியப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சிறப்புக் கல்வி மாணவர்கள் பிற்காலத்தில் சாதாரண வகுப்பு மாணவர்களுடன் இணைந்து பயிலும்போது, அவர்களுக்குத் தாய்மொழி அறிவு அவசியமாகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறைந்த எண்ணிக்கையிலான 30-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த ஆண்டு ஸ்மார்ட் டிவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு மித்ரா அமைப்பின் மூலம் 387 தமிழ்ப்பள்ளிகளுக்கு இத்தகைய நவீன கல்விச் சாதனங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வோங் கா வோ சுட்டிக்காட்டினார்.

Related News

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்