Sep 26, 2026
Thisaigal NewsYouTube
உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சி 2026-ல் எஸ்.ஜே.கே.டி செயின்ட் ஜோசப் மாணவர்கள் சாதனை
தமிழ் பள்ளி

உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சி 2026-ல் எஸ்.ஜே.கே.டி செயின்ட் ஜோசப் மாணவர்கள் சாதனை

Share:

கடந்த மே 18 முதல் இன்று 20 ஆம் தேதி வரை கோலாலம்பூர் கண்காட்சி மையத்தில் நடைப்பெற்ற உலக இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சியில் (WYIE) 2026 அறிவியல் மற்றும் புதுமை கண்காட்சியில், கோலாலம்பூர், செந்தூல் செய்ன்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். பள்ளியிலிருந்து பங்கேற்ற இரண்டு அணிகளும் தங்களின் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் தங்க மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தீ பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை தொடர்பான புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கிய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

இவர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பு, தீ விபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி “நேச்சரலாக் ஹேர் கிளே” உருவாக்கிய மற்றொரு அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

இவர்கள் தயாரித்த இயற்கை தலைமுடி திரவியம் , ஆரோக்கியமான தலைமுடி பராமரிப்பையும், நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் வகையில் அமைந்திருந்தது.

துர்கேசினி கலைக்குமார், கீர்த்திகாசினி கலைக்குமார், வைஷ்ணவி அகஸ்தியர், வித்யா அகஸ்தியர். ஹவீனா சுந்தரம், மனுஶ்ரீ பிரகாஷ், திலோசினி கலைக்குமார், வந்தனா கானபிரகாஷ், லோனிகா விஜயகுமார், அனோஷ்கா ஸ்ரீ விக்னேஷ் ஆகிய மாணவிகள் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களாவர்.

இந்த வெற்றி, மாணவர்களின் அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகும். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களின் சாதனையை பெருமையுடன் பாராட்டியுள்ளனர்.

Related News

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்