ரெம்பாவ், ஜனவரி.05-
நெகிரி செம்பிலான் மாநிலம் ரெம்பாவ் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், யுஐடிஎம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் உயிரிழந்தனர்.
பெக்கான் லுபோக் சீனா பகுதியில், நேற்று மாலை 4 மணியளவில் நடந்த இவ்விபத்தில், 19 வயதான Ismawanie Husna Ismail மற்றும் Nur Ain Zulaisya Zahrain ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
யுஐடிஎம் பல்கலைக்கழகத்தில் இவர்கள் இருவரும் டிப்ளோமா படித்து வந்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் வானிலை சீராக இருந்த போதும் கூட, வளைவு ஒன்றில் அவர்கள் செலுத்திய யமாஹா NVX வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதாக, ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹசானி ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இருவரின் உடலும் சவப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.








