கோலாலம்பூர், டிசம்பர்.10-
நாட்டில் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப் பள்ளிகள் மூடப்படுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படும் என்று வதந்திகள் பகிரப்படலாம். ஆனால், அது உண்மையல்ல. 1996 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் கீழ் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு செயல்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வோங் கா வோ குறிப்பிட்டார்.
முன்னதாக, வோங் கா வோ, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணனுடன் இணைந்து தமிழ்ப்பள்ளிகளுக்குத் திறன் பலகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.








