அலோர் ஸ்டார், நவம்பர்.03-
கெடா மாநில அரசாங்கம், மாநிலத்தில் உள்ள 18 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரிங்கிட் மானியத்தை வழங்கிருப்பததாக கெடா மாநில சீனர், இந்தியர், சயாமியர் மற்றும் அரசு சாரா இயக்கங்களின் ஆட்சிக் குழு உறுப்பினரும் கூலிம் சட்டமன்ற உறுப்பினருமான வோங் சியா ஸென் தெரிவித்தார்.

கெடா மாநில அளவிலான தீபாவளி பண்டிகையின் திறந்த இல்ல உபசரிப்பு சுங்கை பட்டாணி ஸ்வரணாபூமி மண்டபத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது இந்த திறந்த இல்ல உபசரிப்புக்கு கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனூசி முகமட் நோ சிறப்புப் பிரமுகராகக் கலந்து சிறப்பித்தார் .

வோங் சியா ஸென் தமது சிறப்புரையில், கெடா மாநில அரசாங்கம், அனைத்து இன மக்களையும் சம நிலையில் கவனிக்கப்பட்டு ஒவ்வொரு இனத்தவரின் கலாச்சாரம் , பாரம்பரியத்தை மதித்து அவரவர் பண்டிகைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதற்கு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஓர் உதாரணம் என்றார். இம்மாநிலத்தில் எல்லா இன மக்களையும் அவர்களின் கலாச்சார பின்பற்றிய வாழ்கின்றனர். அதனை எவரும் தடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் கெடா மாநிலத்திலுள்ள 18 தமிழ்ப்பள்ளிகளின் சிறு சிறு மேம்பாட்டிற்காகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பள்ளிகளின் விண்ணப்பத்திற்கு ஏற்ப மானியம் வழங்கப்பட்டிருப்பதாக வோங் சியா ஸென் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் 5 ஆதரவற்ற சிறார்கள் இல்லங்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது.








