Jun 12, 2026
Thisaigal NewsYouTube
தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவருடன் 413 மாணவர்கள்  பங்கேடுத்தனர்.
தமிழ் பள்ளி

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவருடன் 413 மாணவர்கள் பங்கேடுத்தனர்.

Share:

பினாங்கில் அமைந்துள்ள தேசிய வகை அஸாத் தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கான தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் உட்பட 413 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர் .

அண்மையில் செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் பினாங்கு மாநிலத்தின் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழுத் தலைவருமாற டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு அவரின் பேராதரவுடன் இச்சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பினாங்கு, கெடா,பெர்லிஸ் மற்றும் பேரா ஆகிய 4 மாநிலங்களிலிருந்து மாணவர்கள் இச்சதுரங்க போட்டியில் பங்குகெடுத்துள்ளனர். அதில் ஆரம்ப பள்ளியிலிருந்து 305 மாணவர்களும், 98 இடைநிலைப்பள்ளி மாணவர்களும், 8 ஆசியர்களும் மற்றும் ஒரு மாற்றுதிறனாளி என 413 பங்கேற்பாளர்கள் இடம்பெற்றன. இச்சதுரங்க போட்டியினை பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்புக் குழுவின் துணைத் தலைவரும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன் கிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து, அவரின் சிறப்புரையில் இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் இச்சதுரங்கப் போட்டி இனிவரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இப்போட்டியின் மூலம் நம் தமிழ் மாணவர்களின் சதுரங்க விளையாட்டுத் திறன் வெளிப்படுத்துவத்தற்கு ஒரு தளமாக அமையும் என்றார குமரன் கிருஷ்ணன்.

இறுதியாக, 2026 ஆம் ஆண்டின் தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் நற்சான்றிதழ்களும் எடுத்து வழங்கினார். இந்நிகழ்வில் அஸாத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர்.

Related News