Aug 24, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரோபோடிக்ஸ் போட்டியில் சாதனை
தமிழ் பள்ளி

பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரோபோடிக்ஸ் போட்டியில் சாதனை

Share:

இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் நடைபெற்ற 'ரோட் டு கோடேவர் 7.0' அனைத்துலக அளவிலான போட்டியில் பங்கேற்று பினாங்கு மற்றும் மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர் ஆறு தமிழ் பள்ளி மாணவர்கள். கடுமையான போட்டிகளைக் கொண்ட 20 நாடுகளின் 280 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சுங்கை அரா தமிழ்ப்பள்ளி மற்றும் பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மலேசியா சார்பில் கலந்து கொண்டனர்.

இதில், சுங்கை அரா தமிழ் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த “ஈக்கோபாட் சார்ட்டர்” என்ற ஸ்மார்ட் கழிவு பிரித்தெடுக்கும் முறைமை திட்டம், நான்காம் ஆறுதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது.

இம்மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, பினாங்கு மாநில தமிழ் பள்ளிகளுக்கான சிறப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்கள், மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொம்தாரில் (KOMTAR) உள்ள தமது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அங்கீகாரமாக ஒவ்வொரு மாணவருக்கும் பாராட்டுச் சான்றிதழும், தலா 300 ரிங்கிட் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவித்தார்.

தமிழ் பள்ளி மாணவர்கள் 21ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் தொழில்நுட்பம், ஸ்டெம் கல்வி மற்றும் செயற்கை நுண்ணறிவான AI துறைகளில் தொடர்ந்து உலகளவில் சாதனை படைக்க பினாங்கு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு உறுதியளித்தார்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு