Aug 24, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை
தமிழ் பள்ளி

பினாங்கு: 28 தமிழ்ப் பள்ளிகளுக்குச் சொந்த நிலம் கிடைக்க நடவடிக்கை

Share:

பினாங்கில் உள்ள அனைத்து 28 தமிழ்ப் பள்ளிகளும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பெறுவதை உறுதி செய்ய பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்புக் குழு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு நில உரிமை பெற்றுத் தரப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் மற்ற பள்ளிகளுக்கும் நில உரிமை பெற்றுத் தரப்படும் என அதன் தலைவர் டாத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.

கல்வித்துறை துணை அமைச்சர் வங் கா வோ முன்னிலையில் இன்று நடைபெற்ற ராஜாஜி தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டடக் கட்டுமான அனுமதி ஆவணம் வழங்கும் விழாவில் டத்தோஸ்ரீ சுந்தராஜு இதனை தெரிவித்தார்.

மேலும், மேம்பாட்டாளரின் நிறுவன சமூக கடப்பாடு திட்டத்தின் கீழ் இந்த ராஜாஜி தமிழ்ப் பள்ளி புதிய இடத்தில் கட்டப்படுவதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. மேலும், நீண்டகாலமாகத் தாமதமாகி வந்த சுங்கை பக்காப் மற்றும் ஜூரு தமிழ்ப் பள்ளிகளின் திட்டங்கள் உட்பட மொத்தம் மூன்று தமிழ்ப் பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கப்படவுள்ளதாக பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டாத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, சிறப்புக்குழுவின் துணைத் தலைவர் கெல்வின் என்ற குமரன் கிருஷ்ணனும் உடன் இருந்தார்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட்  சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஐசிடி போட்டி: ஜூலை 26 வரை பதிவு நீட்டிப்பு