Sep 25, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அசாத்திய சாதனை’
தமிழ் பள்ளி

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அசாத்திய சாதனை’

Share:

பெற்றோர்களின் வழிகாட்டலில் தீபகற்ப மலேசியாவின் மிக உயர்ந்த 7 மலைகளை வெற்றிகரமாக ஏறி முடித்த, கூலிம் மற்றும் புக்கிட் மெர்தாஜைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் அசாத்திய சாதனை படைத்துள்ளனர்.

தமிழ் பள்ளி மாணவர்களான 12 வயது குபேரன் பூபாலன் மற்றும் தமிழ் பள்ளியில் பயின்று தற்போது இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களான 14 வயது ஹிம்மனேஸ் முகிலன், 16 வயது 16 நவீன் பூபாலன் ஆகிய இந்த மாணவர்கள், கடந்தாண்டு தொடங்கி 7 மாதங்களுக்குள் குனோங் தாஹான், கொர்பு உள்ளிட்ட 7 கரடுமுரடான மலைகளை ஏறி இவ்வாண்டு ஏப்ரலில் தங்களது இலக்கை நிறைவு செய்தனர். காடுகளிலேயே கூடாரம் அமைத்து, கொண்டு சென்ற உணவை மட்டும் உண்டு, பல இன்னல்களுக்கு மத்தியில் இச்சாதனையை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இவர்களின் இந்த அரிய சாதனைக்காக ‘சோழன் உலக சாதனை’ , ‘வேர்ல்ட் ரெக்கார்ட் சர்டிபிகேட்’ ஆகிய 2 உலக சாதனை விருதுகளும், ‘அமேசிங் மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்’ விருதும் வழங்கப்பட்டுள்ளன.

தங்கள் சாதனை குறித்து மூவரும் இவ்வாறு விவரித்தனர்.

மலை ஏறுவதால் பிள்ளைகளுக்கு மன வலிமையும் சுய ஒழுக்கமும் வளர்கிறது எனக் குறிப்பிட்ட பெற்றோர்கள், இம்மாணவர்களின் இந்த உலகளாவிய வெற்றி ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும், அவர்கள் பயின்ற தமிழ்ப்பள்ளிகளுக்கும் கிடைத்த பெருமை என்று பெருமிதத்தோடு தெரிவித்துக் கொண்டனர்.

Related News

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்