Oct 16, 2025
Thisaigal NewsYouTube
தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் டான் ஶ்ரீ ஜெகதீசன் பங்கேற்பு
தமிழ் பள்ளி

தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் டான் ஶ்ரீ ஜெகதீசன் பங்கேற்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-

கோலாலம்பூர், ஸ்தாப்பாக், தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் 35 ஆவது வருடாந்திர விளையாட்டுப் போட்டி கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர் ஆயர் பானாஸில் உள்ள ஸ்டேடியம் அரேனா அரங்கில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 700 பேர் கலந்து கொண்டது, பள்ளியின் இந்த வருடாந்திர விளையாட்டுப் போட்டியை உற்சாகப்படுத்தியது.

இந்த வருடாந்திர விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு பிரமுகராக நாட்டின் முன்னாள் தேசிய தடகள வீரரும், மலேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் அடையாளமாகவும் விளங்கும் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம் ஜெகதீசன் கலந்து கொண்டது, நிகழ்விற்கு மெருகூட்டியது.

மலேசியாவைப் பிரதிநிதித்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக தேசிய ஓட்டப்பந்தய சாதனையை நிகழ்த்தியவரான டாக்டர் ஜெகதீசன் தமது உரையில், மாணவர்கள் பெரிய கனவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் அந்தக் கனவுகளை நனவாக்க கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தக் கனவுகள் என்பது விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, கல்வித் துறையிலும் உள்ளன. வெற்றி என்பது ஒரு பெரிய கனவில் தொடங்குகிறது. மேலும், வெற்றி என்பது கைவிடாமல் மிகுந்த முயற்சியுடன் அடையப்படுகிறது. அதுதான் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனைப் படைத்தவர்களுக்குப் பெரும் உந்தும் சக்தியாக இருந்துள்ளது என்று டாக்டர் ஜெகதீசன் கூறினார்.

தற்போதைய தலைமுறையினர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் வெற்றி பெற பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாணவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் வெற்றி பெற வழங்கப்படும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஜெகதீசன் தமது உரையில் வலியுறுத்தினார்.

அதே வேளையில் விளையாட்டுத்துறை வாயிலாக மாணவர்களுக்கான வெற்றிகளை உறுதிச் செய்வதற்கு ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றி வரும் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றுக்கு டாக்டர் ஜெகதீசன் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அன்பரசன் குழந்தையன், தமது உரையில் இந்த வருடாந்திர விளையாட்டுப் போட்டி வெகுச் சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் , பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து ஒத்துழைத்ததன் வாயிலாக கிடைக்கப் பெற்ற வெற்றியாகும் என்றார்.

இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளுக்கான அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்ட நிதி பங்களிப்புகள் உட்பட பிளவுப்படாத ஆதரவை நல்கிய அனைத்து பெற்றோருக்கும் அன்பரசன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் டாக்டர் மகாகணபதி தாஸ் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஜெகன் மாணிக்கம் ஆகியோருக்கு அன்பரசன் தமது நன்றியைப் பதிவு செய்தார்.

பள்ளி தலைமையாசிரியர் எம். குணசேகரன் தமது நன்றியுரையில் பள்ளியின் இந்த 35வது ஆண்டு விளையாட்டுப் போட்டியில் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம் ஜெகதீசன் கலந்து கொண்டதும், அவருடன், அனைவரும் இணைந்து இருப்பது பெரும் பேறாகும் என்றார்.

Related News

வட கிந்தா மாவட்ட அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

வட கிந்தா மாவட்ட அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளிக்கு ரிம.450,000 நிதி உதவி

பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளிக்கு ரிம.450,000 நிதி உதவி

தமிழ்ப்பள்ளிகள் பராமரிப்புக்கு 19.09 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படாது

தமிழ்ப்பள்ளிகள் பராமரிப்புக்கு 19.09 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படாது

380 தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்கள் பட்டியலில் இருக்கின்றன!

380 தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்கள் பட்டியலில் இருக்கின்றன!

இனி புதிய பாதைக்கு மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்: முன்னாள் மாணவர் சங்கத்தினரின் தேசிய மாநாட்டில் அதிரடித் திட்டங்கள்!

இனி புதிய பாதைக்கு மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்: முன்னாள் மாணவர் சங்கத்தினரின் தேசிய மாநாட்டில் அதிரடித் திட்டங்கள்!

பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 20 லட்சத்து 50 ஆயிரத்து 100 ரிங்கிட் மானியம் – பினாங்கு அரசு வழங்கியது

பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 20 லட்சத்து 50 ஆயிரத்து 100 ரிங்கிட் மானியம் – பினாங்கு அரசு வழங்கியது