Sep 12, 2026
Thisaigal NewsYouTube
நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
தமிழ் பள்ளி

நகைகளைக் கொள்ளையிட முயன்ற ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையொன்றில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சம்பந்தப்பட்ட நகைக் கடைக்குச் சென்ற அந்த சந்தேக நபர் கையில் கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் வாடிக்கையாளர் யாரும் அக்கடையில் இல்லை. அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஆடவர் அங்கிருந்த பாதுகாவலருடன் கைகலைப்பில் ஈடுபட்டுள்ளார். அதைக் கண்ட அப்பாதுகாவலரின் சக பணியாளர், இரு முறை சந்தேக நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவ்வாடவர் பின்னர் மரணமடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இவ்வேளையில், நகைகள் ஏதும் களவாடப்படவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது