Jul 15, 2026
Thisaigal NewsYouTube
109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்
தமிழ் பள்ளி

109 ஆண்டு பழமை வாய்ந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனி நிலப்பட்டா அங்கீகாரம்

Share:

பேரா மாநில தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 109 ஆண்டுகாலமாக தனியார் நிலத்தில் இருந்த சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, தற்போது பள்ளி வாரியக் குழுவான LPS பெயரில் அதிகாரப்பூர்வ தனி நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழிகாட்டலில், இந்த நில உரிமை மாற்ற முயற்சிக்கு முழு வடிவம் கொடுத்து வெற்றி காணச் செய்தவர் பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் ஆவார்.

இத்தொகுதியில் உள்ள சத்தியசீலா, கிளேபாங் மற்றும் சங்காட் கிண்டிங் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் நிலப்பட்டா பெற்றுள்ள வேளையில், சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் நிலப்பட்டா பெற தொடர்ந்து முயன்று வருவதாக டத்தோ சுரேஷ்குமார் கூறினார்.

மேலும், சங்காட் கிண்டிங் பள்ளிக்கு புதிய விளையாட்டு மைதான நில ஒதுக்கீடும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. பேராவில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் நில உரிமைகளும் எல்.பி.எஸ் பெயருக்கு மாற்றப்பட்டால் மட்டுமே அவற்றின் எதிர்காலம் மற்றும் கல்வி வளர்ச்சி பாதுகாப்பாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த வரலாற்றுச் சாதனை குறித்துப் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். மகாராணி மற்றும் வாரியத் தலைவர் சேகர் ராமையா ஆகியோர் நெகிழ்ச்சியுடன் பேசினர்.

பல ஆண்டு மைதானக் குறையைத் தீர்த்த மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், டத்தோ சுரேஷ்குமாருக்கும் நன்றி கூறிய அவர்கள், இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்கு 17 பேர் பதிந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். பள்ளி நிர்வாகமும் சமூகமும் ஒன்றுபட்டு உழைத்தால், மற்ற தோட்டப்புறப் பள்ளிகளும் இதேபோல் தனி கிராண்ட் பெற முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related News

தமிழ்ப்பள்ளிகளின் கல்வி உரிமை என்றும் பாதுகாக்கப்படும்: அடிக்கல் நாட்டு விழாவில் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ உறுதி

தமிழ்ப்பள்ளிகளின் கல்வி உரிமை என்றும் பாதுகாக்கப்படும்: அடிக்கல் நாட்டு விழாவில் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ உறுதி

கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு-தனியார் கூட்டு முயற்சி அவசியம்:  அமைச்சர்த பட்லினா சீடேக் கூறுகிறார்

கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு-தனியார் கூட்டு முயற்சி அவசியம்: அமைச்சர்த பட்லினா சீடேக் கூறுகிறார்

லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம்: கல்வி அமைச்சர் அடிக்கல் நாட்டினர்

லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம்: கல்வி அமைச்சர் அடிக்கல் நாட்டினர்

முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுதல் பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50வது ஆண்டின் பொன்விழாவின் நோக்கம் .

முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுதல் பாயா கமுண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 50வது ஆண்டின் பொன்விழாவின் நோக்கம் .

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் டிஜிட்டல் இடைவெளி அபாயக் கட்டத்தில் உள்ளது" - ‘ஏசிஇ’ இயக்கம் அதிரடி அறிக்கை

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் டிஜிட்டல் இடைவெளி அபாயக் கட்டத்தில் உள்ளது" - ‘ஏசிஇ’ இயக்கம் அதிரடி அறிக்கை

கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டடத்திற்கு RM4.2 மில்லியன் ஒதுக்கீடு: வேட்பாளர் வோங் போ யாங் தகவல்

கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டடத்திற்கு RM4.2 மில்லியன் ஒதுக்கீடு: வேட்பாளர் வோங் போ யாங் தகவல்