கோலாலம்பூர், டிசம்பர்.26-
கடந்த நவம்பர் மாதம் இறுதியில், தைவான், தைப்பேவில் நடைபெற்ற அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்த பினாங்கு, தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 24 மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
சத்திஸ் குமரன், கார்த்திகேயன் உத்தமசீலன், திமோதி நாதன் திவ்ய நாதன், நிஷான் ரவீந்திரன், முனீஸ்வரன் சரவணன், ருக்கேஸ் ராவ் கலையரசு, ஐஸ்வன் அர்வீன், சர்ச்சின் காளிதாசன், குகன் கமலநாதன், விமல்ராஜ் ஜெயகுமார், தான்வீன் சுகுமாறன், சத்தீஸ் குமரன், ஆரன் அர்வீன், யாழினி தயாளன், பவீந்திரன் லிங்கேஸ்வரன், இந்துஜா கனகநாயுடு, யாஷ்வன் தேவேந்திரன், ஸ்ரீசாஸ்தா சுப்பிரமணிய பாரதி, லக்ஷமண நாராயண பிள்ளை கோபாலகிருஷ்ணன், ஷேசன் வேலன், சஜீத் செல்வம், அபிநய ஸ்ரீ ஸ்ரீகாந்த், புவேந்திர குமார் ஜெயகுமார் முதலிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
மலேசியாவிற்கும், நாட்டு மக்களுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்ந்த 24 மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது ஏன் என்று மக்களின் எண்ண அலைகளைத் திசைகள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அதன் எதிரொலியாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அந்த 24 மாணவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.








