Dec 31, 2025
Thisaigal NewsYouTube
ஏட்டுக் கல்வி, தொழில் கல்வி மற்றும் விளையாட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் வேண்டும்!
தமிழ் பள்ளி

ஏட்டுக் கல்வி, தொழில் கல்வி மற்றும் விளையாட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் வேண்டும்!

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.31-

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு " திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப ஒரு செயலில் நாம் இறங்கி அதில் பல நுணுக்கங்களைக் கற்கும் பொழுது நம்முடைய அறிவு ஆற்றல் இன்னும் வளர்ந்துக் கொண்டே செல்லும் என்பதுதான் அக்குறலின் பொருள். அதுபோல்தான் கல்வியும் ஆகும் என்றார் மலேசிய கல்வி கோன் இயக்கத்தின் தேசிய தலைவர் முனைவர் கி.பா.வேலாயுதம். மலேசியக் கல்வி கோன் இயக்கம் இந்திய மாணவர்கள் ஏட்டுக் கல்வி, தொழில் கல்வி மற்றும் விளையாட்டுப் கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே இவ்வியக்கம் பல திட்டங்களை வழிவகுத்து வருவதாக வேலாயுதம் குறிப்பிட்டார்.

நேற்று பினாங்கு பட்டவொர்ட்டில் அமைந்துள்ள சரவணாஸ் உணவகத்தின் கூட்ட அறையில் கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களின் மலேசிய கல்வி கோன் இயக்கத்தின் உறுப்பினர்களுடன் சந்திப்புக் கூட்டம் சிறப்பாக முனைவர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற முனைவர் வேலாயுதம் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவரின் உரையில் இந்தியச் சமூகத்தின் மாணவர்களின் கல்விக்கு மலேசிய கல்வி கோன் சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு வருகின்றது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு மாணவர்கள் ஏட்டுக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் தொழில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்நாட்டில் தமிழ்மொழி மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் முக்கியத்துவங்களைப் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக முனைவர் வேலாயுதம் தெரிவித்தார். அத்துடன் இளைஞர் மத்தியில் சீர்கேடான செயல்கள் தலை தூக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள தொழில் கல்விகளில் (TVET) அவர்களை ஈடுபடுத்துவதற்கான முயற்சியில் மலேசிய கல்வி கோன் இயக்கம் துடிதுடிப்பாக இறங்கிவுள்ளன என்றார்.

ஆகவே, 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலேசியக் கல்வி கோன் இயக்கத்தில் இதுவரை 400 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் கல்வி சார்ந்த துறைகளில் பணி புரிந்து வருபவர்களும் பணி ஓய்வு பெற்றவர்களும் ஆவர் . இந்த இயக்கம் முழுமையாக கல்விக்காகவும் நம் தாய்மொழிக்காகவும் செயல்படும் என்றார் முனைவர் வேலாயுதம்.

Related News