கல்வி ஒன்றினால் மட்டுமே ஒரு சமூகம் உயர முடியும் என்பதில் உறுதியாக இருந்து வரும் நெகிரி செம்பிலான் லோபாக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் டிஏபி யை சேர்ந்த சியூ செவ் யோங், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதில் தனித்துவமாக கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லோபாக் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் சியூ செவ் யோங், லோபாக் தமிழ்ப்பள்ளியை தத்தெடுத்துவரைப் போல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இதர உதவிப் பொருட்களை வழங்குவதில் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறார். லோபாக் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மகேஸ்வரி கேசவன் முதல் தற்போது தலைமையாசிரியராக பணியாற்றி வரும் ஜெயந்தி சுப்பிமணியம் வரையில் பள்ளியின் தேவைகளை அவ்வப்போது கேட்டறிந்து உதவுவதில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சியூ செவ் யோங் முழுக்கடப்பாட்டை நிரூப்பித்துள்ளார்.
லோபாக் தமிழ்ப்பள்ளியில் எந்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் நிகழ்வில் சிறிது நேரம் கலந்த கொள்வதுடன் தனது பங்களிப்பாக ஏதவாது ஒரு வகையில் ஓர் உதவியை செய்து விட்டு செல்வதை சியூ செவ் யோங் ஒரு பாரம்பரியமாக கொண்டுள்ளார். இவ்வாண்டு பள்ளியின் ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட சியூ செவ் யோங்,தாம் வாக்குறுதி அளித்ததைப் போல ஒலி பெருக்கி சாதனைத்தையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

Related News

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளில் 237.48 மில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதி ஒதுக்கீடு: எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதி: ஜோகூர் மந்திரி பெசார் அறிவிப்பு


