Dec 1, 2025
Thisaigal NewsYouTube
புக்கிட் கெளேடேக் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி
தமிழ் பள்ளி

புக்கிட் கெளேடேக் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

Share:

சிரம்பான், ஜூன்.28-

நெகிரி செம்பிலானில் புக்கிட் கிளேடேக் தேசிய வகை ஆரம்பத் தமிழ்ப்பள்ளியின் 33 ஆவது விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியத்தின் சிறப்பு அதிகாரி முரளி தங்கையா அப்போட்டிக்கு வருகை தந்து சிறப்பித்தார். அவ்விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்த அப்பள்ளி நிர்வாகத்தினருக்கு அவர் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில் மாணவர்களுக்கான உதவிகள், மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவிகள், பொது மற்றும் தனியார் உயர்க்கல்விக் கூட உதவிகள், பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவுபடி, முதல் வகுப்பு இளங்கலை சிறப்பு விருது உள்ளிட்ட மாநில அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் தமதுரையில் எடுத்துரைத்தார்.

இதனிடையே, பள்ளியின் நுழைவாயிலில் சாலையை மறுசீரமைப்பது உட்பட பள்ளிக்குத் தொடர்ச்சியாக பல உதவிகளை வழங்கி வரும் ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தி. கோபிநாத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதைத் தவிர பள்ளி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயிரத்து 500 ரிங்கிட் மான்யமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் அவ்விளையாட்டுப் போட்டியில் பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் நளினி, துணைத் தலைவர் சந்திர மோகன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அழைப்பு பெற்றவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related News