ஜார்ஜ்டவுன், டிசம்பர்.01-
தைவான், தைப்பேவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலக எந்திரப் போட்டியில் 60 முதல் 80 வெற்றிப் பதக்கங்களை குவித்து, மலேசியாவிற்குப் பெருமை சேர்ந்து, வெற்றிகரமாக நாடு திரும்பிய தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 24 மாணவர்களுக்கு இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரின் கனவையும் நனவாக்கி அந்த 24 மாணவர்களும் விமான நிலையத்தை வந்தடைந்த தருணம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைத்து மாணவர்களுக்கும் நாதஸ்வர மேளதாள இசையுடன் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
CISCO ACADEMY மூலம் பயிற்சி பெற்று, சாதனைப் படைத்த 24 மாணவர்களுக்கு பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.

வெற்றிப் பதக்கங்களுடன் நாடு திரும்பிய 24 மாணவர்களுக்கும் டான்ஸ்ரீ சுந்தராஜு மற்றும் CISCO ACADEMY உறுப்பினர்கள், பொன்னாடைப் போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
தைப்பேவில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெற்ற இந்த அனைத்துலக எந்திரப் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடியும் என்ற தாரகச் சொல்லை நமது சக்தியை அதிகரிக்க செய்து வெற்றியை நிகழ்ந்த வைக்கும் என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டினார் டத்தோஸ்ரீ சுந்தராஜு.
வெற்றிப் பதக்கங்களைக் கழுத்தில் சுமந்தவாறு வெற்றி நடையுடன் நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் வெற்றியைப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் சமர்ப்பணம் செய்வதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி, அவர்கள் சாதனைப் புரிவதற்கு அடித்தளமாக அமைந்தது.
பினாங்கு மாநில தமிழ் பள்ளிகளுக்கான சிறப்பு குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு வழங்கிய ஊக்குவிப்பும், உற்சாகமும், தங்களுக்கு பெரும் உந்துதலாக அமைந்தது என மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.








