Oct 24, 2026
Thisaigal NewsYouTube

அந்தோணி லோக் வழங்கிய மானியத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்தோணி லோக் வழங்கிய மானியத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்

சிரம்பான், ஜூன்.27-

தனது சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக் வழங்கிய மானியத்தை பள்ளிச் சீரமைப்பு, தளவாடங்கள் மற்றும் ஐசிடி பொருட்களை வாங்குவதற்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம் என்று பள்ளி பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதித் தெரிவித்துள்ளனர்.

இன்று சிரம்பான் லோபாக் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் ரிங்கிட் மானியத்தை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக்கிடமிருந்து பெற்றுக் கொண்ட அவர்கள், இந்த மானியத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தனர்.

லெங்கேங் தோட்ட தமிழ்ப்பள்ளி சார்பில் 33 ஆயிரத்து 460 ரிங்கிட் மானியத்தை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் K. உதயகுமரன் பெற்றுக் கொண்டார்.

இவ்வேளையில் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக், நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் மற்றும் முன்னாள் தலைமையாசிரியர் சரவணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உதயகுமரன் தெரிவித்தார்.

லோபாக் தமிழ்ப்பள்ளி சார்பில் 86 ஆயிரத்து 280 ரிங்கிட் மானியத்தைப் பெற்றுக் கொண்ட அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சத்தியசீலன் திருமலைசாமி கூறுகையில், இந்த நிதியை மாணவர்களின் வளர்ச்சிக்கும், பள்ளிக் கட்டட சீரமைப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டார்.

பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சார்பில் 69 ஆயிரத்து 467 ரிங்கிட் மானியத்தைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருடன் இணைந்து பெற்றுக் கொண்ட பள்ளி தலைமையாசிரியர் ரவிகுமார் கூறுகையில், இந்த நிதியின் மூலம் பள்ளியின் ஐசிடி அறையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

நீலாய் தமிழ்ப்பள்ளி சார்பில் 66 ஆயிரத்து 415 ரிங்கிட் மானியத்தைப் பெற்றுக் கொண்ட பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் தவசீலன் கூறுகையில் பள்ளியில் ஐசிடி மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றார்.

இந்த மானியம் வாங்கும் நிகழ்வில் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் J. அருள்குமார், லோபாக் சட்டமன்ற உறுப்பினர் சியூ சே யோங் மற்றும் 6 பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தமிழ் பள்ளி →
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்