Dec 1, 2025
Thisaigal NewsYouTube
வட கிந்தா மாவட்ட அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி
தமிழ் பள்ளி

வட கிந்தா மாவட்ட அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

Share:

ஈப்போ, அக்டோபர்.07-

பேரா, வட கிந்தா மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான காற்பந்து போட்டி மிகச் சீரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெயரில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வட கிந்தாவில் உள்ள 21 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன.

வட கிந்தா மாவட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஒத்துழைபுடன் PERSATUAN KEBAJIKAN SEHATI WARGA PERAK அமைப்பு ஏற்பாட்டைச் செய்திருந்தது.

கால்பந்துப் போட்டியை தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் மூத்த சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ் குமார் தொடக்கி வைத்தார்.

விளையாட்டுத் துறையில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த மீண்டும் இவ்வாண்டு இப்போட்டியை நடத்துவதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எஸ். ஸ்டென்லி நெல்சன் கூறினார்.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் செட்டியார் தமிழ்ப்பள்ளி சாம்பியனாகவும், கிளேபாங் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தையும் , அரசினர் தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடத்தையும், டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி நான்காவது இடத்தையும் பிடித்தன.

பெண்கள் பிரிவில், அரசினர் தமிழ்ப்பள்ளி சாம்பியனாகவும், செட்டியார் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடத்தையும் மற்றும் நான்காவது இடத்தை கிளேபாங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

வெற்றிப் பெற்றவர்களுக்கு டத்தோ சுரேஷ் குமார், வணிகப் பிரமுகர் டத்தோ ஶ்ரீ எஸ். கேசவன் மற்றும் பேரா தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

Related News