Dec 27, 2025
Thisaigal NewsYouTube
கல்வித் தோட்டத்தின் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் தொடர்கிறது
தமிழ் பள்ளி

கல்வித் தோட்டத்தின் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் தொடர்கிறது

Share:

ஈப்போ, டிசம்பர்.27-

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பேரா மாநில அரசு வழங்கிய 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கல்வித் தோட்டத்தின் வழி நிர்வகித்து வரும் பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கு பேரா மாநில அரசு ஒத்துழைப்பை வழங்கும் என்று அதன் ஆட்சிக் குழு உறுப்பினரும், இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ அ. சிவநேசன் கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு கடந்ந 2011 ஆம் ஆண்டு 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பேரா மாநில அரசு வழங்கியது. அந்த நிலத்தை நிர்வகிக்க கடந்த 2013 ஆம் ஆண்டு பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் பதிவுச் செய்யப்பட்டது. அதில் செம்பனை பயிர் செய்து அதன் மூலம் கிடைக்கின்ற வருமானம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022 முதல் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

இன்று ஈப்போவில், பேரா மாநில அரசாங்க செயலகத்தில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சிவநேசன் இதனைக் கூறினார்.

இந்த ஆண்டு பேரா மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் செலவில் இந்த பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டுகளில் மேலும் உதவிகள் வழங்கப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

Related News