கோலாலம்பூர், அக்டோபர்.08-
எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோயினால் தாம் அவதியுற்று வரக்கூடும் என்று செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தியாவைத் தளமாகக் கொண்ட ஓன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு எதிராக சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாகிர் நாயிக், பத்து மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி, வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தாம் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டதைப் போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது மூலம் அந்த செய்தி தளம் தம்முடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸாகிர் நாயிக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி அந்த ஓன்லைன் செய்தி நிறுவனம், யூடியூப் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த காணொளியில் தம்முடைய ஒழுங்கீன நடவடிக்கையினால் தமக்கு இந்த பாலியல் தொற்று நோய் ஏற்பட்டு இருப்பதைப் போல் தவறாகச் சித்தரித்துள்ளது என்ற தம்முடைய வழக்கறிஞர் நோட்டீசில் ஸாகிர் நாயிக் தெரிவித்துள்ளார்.