Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ஜெர்மனியில் போக்குவரத்து முடக்கம்: எதிர்வரும் நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
உலகச் செய்திகள்

ஜெர்மனியில் போக்குவரத்து முடக்கம்: எதிர்வரும் நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

Share:

பெர்லின், பிப்ரவரி.25-

ஜெர்மனியில் ஊதியம் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்தக் கோரி, எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகள்க்ல் நாடு தழுவிய உள்நாட்டு போக்குவரத்து வேலை நிறுத்தத்திற்கு அந்நாட்டின் 'வெர்டி' என்ற பொதுத்துறை தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

சுமார் 100,000 பணியாளர்களை உள்ளடக்கிய 150 பேருந்து, டிராம் மற்றும் உள்ளூர் தொடருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்லின் மற்றும் ஹாம்பர்க் போன்ற முக்கிய நகரங்களும் இதில் அடங்கும். வேலை நேரம் குறைப்பு, இரவு மற்றும் வார இறுதிப் பணிகளுக்கான கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் ஊதிய உயர்வு தொடர்பாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் 16 மாநிலங்களிலும் நிலவும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பணிச் சுமையைக் குறைக்கப் பேச்சுவார்த்தைகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனத் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக ஜெர்மனி முழுவதும் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை