Sep 13, 2026
Thisaigal NewsYouTube
குவைத்தில் அமெரிக்க விமானப்படைத் தளம் அருகே போர் விமானம் விபத்து: விமானிகள் உயிர் தப்பினர்
உலகச் செய்திகள்

குவைத்தில் அமெரிக்க விமானப்படைத் தளம் அருகே போர் விமானம் விபத்து: விமானிகள் உயிர் தப்பினர்

Share:

குவைத், மார்ச்.02-

குவைத்தின் அல்-ஜஹ்ரா (Al Jahra) பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு அருகே போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்களின்படி, பாலைவனப் பகுதியில் அந்த விமானம் செங்குத்தாகக் கீழே விழுந்து நொறுங்குவதும், அதைத் தொடர்ந்து பெரும் புகைமூட்டம் எழுவதும் பதிவாகியுள்ளது.

விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாவதற்கு முன்னரே, அதிலிருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதை மற்றொரு வீடியோ காட்சி உறுதிப்படுத்துகிறது.

இதன் மூலம் விமானம் விபத்துக்குள்ளாகும் முன் அவசரக்கால வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது.

இருப்பினும், விபத்துக்குள்ளான அந்தப் போர் விமானம் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமானதா அல்லது பிற நாட்டு விமானப்படையைச் சேர்ந்ததா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை