Jan 11, 2026
Thisaigal NewsYouTube
வெனிசுலாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்
உலகச் செய்திகள்

வெனிசுலாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

Share:

வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க குடிமக்களுக்கான அனைத்துலக விமானங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதால், வெனிசுலாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், வெனிசுலாவில் பாதுகாப்பு நிலைமை நிச்சயமற்றதாகவே உள்ளது என்றும், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எனவே அமெரிக்க குடிமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வெளியேறுவதற்கு முன் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

வெனிசுலாவில் உள்ள ஆயுதமேந்திய குழுக்கள் சாலை தடைகளை அமைத்து அமெரிக்க குடியுரிமை அல்லது அமெரிக்காவிற்கான ஆதாரங்களைத் தேடுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, அமெரிக்க குடிமக்கள் பயணம் செய்யும் போது விழிப்புடன் இருக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும் தூதரகம் அறிவுறுத்துகின்றது.

வெனிசுலாவுக்குச் செல்லத் திட்டமிடும் அமெரிக்க குடிமக்கள் நாட்டைத் தவிர்க்கவும், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பல தொடர்பு வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

Related News