Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் பதவி: டிரம்ப் பரிந்துரைத்த நிக் ஆடம்ஸின் பெயர் நீக்கம்
உலகச் செய்திகள்

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் பதவி: டிரம்ப் பரிந்துரைத்த நிக் ஆடம்ஸின் பெயர் நீக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

ஆஸ்திரேலிய-அமெரிக்க பழமைவாத விமர்சகரான நிக் ஆடம்ஸ், மலேசியாவிற்கான அடுத்த அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படுவதற்கான பரிந்துரை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்க செனட் சபைக்கு அனுப்பப்பட்ட அவரது நியமனம், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது அது காலாவதியாகி மீண்டும் அதிபரிடமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்டின் வெளியுறவு உறவுக் குழுவில் இந்த நியமனம் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படாமல், நடைமுறைப்படி ஜனவரி 3-ஆம் தேதி அது அதிபரின் பார்வைக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக செனட் இணையதளப் பதிவுகள் காட்டுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் செனட் சபைக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட நீண்ட நியமனப் பட்டியலிலும் ஆடம்ஸின் பெயர் இடம் பெறவில்லை என்று Sydney Morning Herald செய்தி வெளியிட்டுள்ளது.

Related News