ஹாங் காங், செப்டம்பர்.20-
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று, ஹாங் காங் நகரில் உள்ள ஒரு கட்டுமானப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
நேற்று செப்டம்பர் 19-ஆம் தேதி, கண்டுபிடிக்கப்பட்ட அந்த வெடிகுண்டின் எடை சுமார் 450 கிலோ என்றும், அது இன்னும் முழுமையாகச் செயல்படும் நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அது தவறாகக் கையாளப்பட்டால் பெரும் உயிரிழப்புகள் நேரிடும் என்பதால், அப்பகுதியில் வசித்து வந்த 6000 குடியிருப்பாளர்கள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்று சனிக்கிழமை காலை நிலவரப்படி, இதுவரை 2,800 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை அறிவித்துள்ளது.