Jan 17, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கப் பூங்காவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி
உலகச் செய்திகள்

அமெரிக்கப் பூங்காவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

Share:

வாஷிங்டன், ஏப்ரல்.15-

அமெரிக்காவில் உள்ள பூங்காவொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். ஆர்கன்சஸ் பகுதியில் லிட்டில் ராக் அருகில் மிக பெரிய பூங்காவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. 10 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அப்பூங்காவில் பெரிய விளையாட்டு மைதானம், கூடைப்பந்து ஆடுகளம் உள்ளது.

பூங்காவில் நூற்றுக்கணக்கான பேர் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு எதனால் நிகழ்ந்தது? யார் துப்பாக்கியால் சுட்டது போன்ற விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். முதல்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், முழு விவரங்கள் பின்னரே தெரிய வரும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

Related News