Jan 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

துருக்கியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது, தேடல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது

Share:

துருக்கியின் மத்தியப் பகுதியில் Konya மாவட்டத்தில் மூன்று மாடிக் கட்டடமொன்று மொன்று இடிந்து விழுந்தது. இதுவரை காயமுற்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மேலும் ஐவர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என ஐயுறப்படுகிறது. அவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உரிமம் வழங்கப்பட்ட அந்த கட்டடம் அதன் பிறகு புதுப்பிப்பு நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அக்கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் கண்டறியப்படுகிறது.

அந்த கட்டடம் 14 மாடிகளைக் கொண்டதாகும். ஏழு கடைகளும் அதில் செயல்பட்டு வந்தன.

Related News