ஹாங் காங், ஜூலை.21-
ஹாங் காங்கைப் புரட்டிப் போட்டுள்ள 'விபா' சூறாவளியால் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அண்டை நாடான சீனாவின் சிறப்பு நிர்வாகப் பிரதேசமாக ஹாங் காங் உள்ளது. இங்கு 'விபா' சூறாவளி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பசிபிக் பகுதியில் உருவான 'விபா' சூறாவளி ஹாங் காங் கரையில் இருந்து 50 கி.மீ., தொலைவில் கடந்து சென்றது.
இதனால் மணிக்கு 140 முதல் 170 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. மூன்று மணி நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மரங்கள் விழுந்தன. முக்கியச் சாலைகளில் மழை நீர் தேங்கியது.
விமானச் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சூறாவளி காற்றால் நேற்று 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், 80,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.








