Oct 9, 2026
Thisaigal NewsYouTube

விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை

புதுடெல்லி, ஜூலை.12-

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை நிராகரிக்கிறோம் என இந்திய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பான ஏஏஐபி விசாரணை நடத்துகிறது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், இதுதவிர, விமானிகளின் கடைசி நேர கலந்துரையாடல் பற்றியும், அவர்களின் பேசியதில் இடம் பெற்ற விஷயங்கள் என்ன என்பது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 இன்ஜின்களும் செயலிழந்துள்ளன. ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார் என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், விசாரணை நடக்கும் விதமும், திசையும், விமானிகள் மீது தான் தவறு என்ற ஒரு தலைபட்சமாகச் செல்கிறது. இந்த அனுமானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என இந்திய விமானிகள் சங்கம் கூறியுள்ளது.

பொறுப்பான அதிகாரி கையெழுத்து அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விசாரணை ரகசியமாக நடைபெறுவதால், அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததுடன், அதன் நம்பகத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது. அனுபவம் வாய்ந்த விமானிகள் இன்னும் விசாரணைக் குழுவில்லை இடம் பெறவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →