பிரான்ஸ், ஜூலை 1-
பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான முதல் சுற்று தேர்தல் முடிவில் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி பின்னடவை சந்தித்துள்ளது. இது எந்த வகையில் இம்மானுவேலை பாதிக்கும் என்று பார்க்கலாம்.
பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்துக்கான முதல் சுற்று தேர்தல் முடிவு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. வலது சாரி அணியான நேஷனல் ரேலி முதல் இடத்திலும், இடது சாரி அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. இம்மானுவேல் மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. நேஷனல் ரேலி கட்சிக்கு மரைன் லே பென் தலைமை தாங்கி வருகிறார்.
முதல் சுற்றில் நேஷனல் ரேலி கட்சி முன்னணி வகித்து வந்தாலும், வரும் ஜூலை 7ஆம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட சுற்று தேர்தல் தான் முடிவுகளை நிர்ணயம் செய்யும். இதையடுத்தே, மரைன் லே பென்னுக்கு அடுத்து இரண்டாம் கட்டத்தில் இருக்கும் 28 வயதாகும் ஜோர்டான் பர்டெல்லா பிரதமராக பதவி ஏற்பாரா என்பது தெரிய வரும்.