வட கொரியா, மே 14-
உலகில் பெரும்பாலான பெண்களுக்கு ரெட் கலர் லிப்ஸ்டிக் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், வடகொரியாவில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. அது ஏன் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
உலகில் இருக்கும் பல நாடுகளில் பலவிதமான விதிகள் உள்ளன. அதிலும் பல விசித்திரமாகவும், நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்தவகையில், வடகொரியா நாடு எப்போதும் பல தடைசெய்யப்பட்ட விஷயங்களால் செய்திகளில் அதிகமாக இடம் பிடித்திருக்கும்.
அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், மக்கள் மீது திணிக்கும் ஒவ்வொரு விதியும் கேட்பதற்கு விசித்திரமாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றைப் பின்பற்ற தவறினால் மக்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

வடகொரியா, ஏற்கனவே பல பிரபலமான பேஷன் பிராண்டுகள் மற்றும் அழகு சாதன பொருட்களை தடை செய்துள்ளது. அந்த லிஸ்டில் கோடிக்கணக்கான பெண்கள் விரும்பி பயன்படுத்தும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,
சிவப்பு நிற லிப்ஸ்டிக் பற்றி அதன் சர்வாதிகார ஆட்சியாளருக்கு என்ன எரிச்சல் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வட கொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் மீதான தடையின் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், இங்குள்ள சர்வாதிகாரி ஆட்சியாளரான கிம் ஜாங் உன், சிவப்பு நிறத்தை முதலாளித்துவம் மற்றும் தனித்துவத்துடன் தொடர்புபடுத்துகிறார். சிவப்பு நிறம் தன்னை விட பெரியவர் இல்லை என்ற உணர்வைக் குறிக்கிறது என்று அவர் நம்புகிறார். அத்தகைய சூழ்நிலையில், கிம் ஜாங் உன் தனது நாட்டில் எந்த நபரும் தன்னை விட பெரியவராக இருக்கக் கூடாது என்று நினைத்து அவர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடைவித்துள்ளார்.
வடகொரியாவில் இருக்கும் பெண்கள் லிப்ஸ்டிக் போட விரும்பினால், சிவப்பு நிறத்திற்கு பதிலாக லேசான கலரில் தான் லிப்ஸ்டிக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விதியை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.