Oct 20, 2025
Thisaigal NewsYouTube
காதல் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்! நடந்தது என்ன? போலீசில் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
உலகச் செய்திகள்

காதல் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்! நடந்தது என்ன? போலீசில் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

Share:

திருச்சி , ஜூலை 10-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(30). இவர், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த வீரம்மாள்(25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் தனது காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(30). இவர், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த வீரம்மாள்(25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது.

https://www.youtube.com/c/polimernews

ந்நிலையில், திருமணத்திற்கு பிறகு பிரவீன் குமார் தினமும் மது அருந்திவிட்டு, தனது காதல் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த ஜூன் 26-ம் தேதி அன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீரம்மாளின் தம்பி இவர்களது பிரச்சனையை பேசி தீர்த்து வைத்துள்ளார். பின்னர், மறுநாள் காலையில் வீரம்மாளின் தம்பிக்கு பிரவீன் குமார் பதற்றத்துடன் செல்போனில் தொடர்பு கொண்டு வீரம்மாள் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் வீரம்மாளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனிடையே பிரவீன் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று பிரவீன் குமார் துவாக்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்: எனக்கும், வீரம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் இதேபோல் தகராறு நடைபெற்றது. இதனால் நான் ஆத்திரத்தில் வீரம்மாளை தாக்கி அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தேன் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரவீன்குமாரை கைது செய்தனர்.

Related News