Sep 13, 2026
Thisaigal NewsYouTube
பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி
உலகச் செய்திகள்

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி

Share:

பிரேசில், ஜூன்.14-

பிரேசில் நாட்டில் பஞ்சி ஜம்ப் சாகச விளையாட்டின் போது, கயிறு கட்ட மறந்ததால், 21 வயதான இளம் பெண் ஒருவர் 130 அடிக்கும் அதிகமான உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் Maria Eduarda Rodrigues de Freitas என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை Sao Paulo மாநிலத்தில் உள்ள ஸ்கெலிடன் பாலம் பகுதியில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பஞ்சி ஜம்ப் நிகழ்ச்சியில் அப்பெண் பங்கேற்றிருந்தார்.

சம்பவத்தின் போது, பாதுகாப்புக் கயிறு முறையாக இணைக்கப்படாத நிலையிலேயே ஊழியர்கள் அவரை பாலத்திலிருந்து தூக்கி வீசும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்நிலையில், அப்பெண் உயிரிழந்தது தொடர்பாக பஞ்சி ஜம்ப் ஏற்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேரை அந்நாட்டுப் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related News