Oct 30, 2026
Thisaigal NewsYouTube

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

இந்தியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர்கள் மலேசியாவின் பாரம்பரிய உணவான நாசி லெமாக்கை ஆரம்பத்தில் இருந்து முழுமையாகச் சமைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி மலேசியர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 'டாட்ஸ் குக்கிங் ஷோ' என்ற சமையல் யூடியூப் பக்கத்தில், விறகு அடுப்பைப் பயன்படுத்தி கிராமத்து பாணியில் இந்த உணவு தயாரிக்கப்பட்டது.

தேங்காய்ப் பால் சோறு மட்டுமின்றி, கல் உரலில் மிளகாயை அரைத்து சம்பல் துமிஸ் தயாரித்தது, வறுத்த நெத்திலி, வேர்க்கடலை, முட்டை, வெள்ளரிக்காய் மற்றும் வறுத்த கோழியுடன் பரிமாறப்பட்டது ஆகியவை மலேசியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

மலேசியாவின் தேசிய உணவின் அசல் அடையாளம் மாறாமல், இவ்வளவு அர்ப்பணிப்புடன் சமைத்ததைப் பார்த்த மலேசிய நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மலேசியாவில் உள்ள சில கடைகளில் விற்கப்படும் நாசி லெமாக்கை விட இது மிகவும் நிறைவாகவும், தரமாகவும் இருப்பதாகப் பாராட்டியுள்ள நெட்டிசன்கள், உள்ளூர் வியாபாரிகள் இதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →