ர்ஷ்யா, மார்ச் 11 -
ரஷ்யாவைச் சேர்ந்த மாணவர் தனது Wifi கட்டமைப்புக்கு உக்ரேனிய முழக்கவரியைப் பெயராகச் சூட்டியதற்கு அவருக்கு 10 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ பல்கலைக்கழக மாணவரான அவர் "உக்ரேனுக்குப் பெருமை" என்று Wifi கட்டமைப்புக்குப் பெயர் சூட்டினார்.
தீவிரவாத அமைப்புகளின் சின்னங்களை வெளிப்படுத்தியதாக நீதிமன்றம் அவரைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது.
உக்ரேனில் ரஷ்யா போர் தொடுத்ததிலிருந்து உக்ரேனை ஆதரித்து வரும் ஆயிரக்கணக்கானோருக்கு சிறைத்தண்டனையோ அபராதமோ விதிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த புதன்கிழமை (6 மார்ச்) அந்த மாணவர் கைதுசெய்யப்பட்டார்.
மாணவரின் அறையைச் சோதனை செய்ததில் தனிப்பட்ட கணினியும் Wifi சாதனமும் கண்டுபிடிக்கப்பட்டன.
தனது கட்டமைப்பை வைத்து அந்த மாணவர் உக்ரேனிய முழக்கவரியை பிரபலப்படுத்த எண்ணியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.