Jan 17, 2026
Thisaigal NewsYouTube
மஹாராஷ்டிராவில்  ஆற்றில் மூழ்கி 6 குழந்தைகள் பலி
உலகச் செய்திகள்

மஹாராஷ்டிராவில் ஆற்றில் மூழ்கி 6 குழந்தைகள் பலி

Share:

மும்பை, ஜூன்.03-

மஹாராஷ்டிராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் நீரில் மூழ்கி ஆறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் இந்திராவதி ஆறு உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த குழந்தைகள் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது குழந்தைகள் ஆறு பேர் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், நீரில் மூழ்கிய குழந்தைகள் ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். ஆற்றில் குளித்த குழந்தைகளுக்கு நீச்சல் தெரியவில்லை. ஆழமான பகுதிக்குச் சென்று குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related News