Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அமெரிக்காவில் காப்பகமொன்றில் திடீர் தீ விபத்து: 9 பேர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமெரிக்காவில் காப்பகமொன்றில் திடீர் தீ விபத்து: 9 பேர் மரணம்

வாஷிங்டன், ஜூலை.15-

அமெரிக்காவில் காப்பகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். மாஸசூசெட் பகுதியில் பால்ரிவர் நகர் உள்ளது. இங்கு மருத்துவக் காப்பகமொன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இக்காப்பகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென பரவிய தீ, கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். காப்பகத்தில் இருந்தவர்கள் தீயில் இருந்து தப்பிக்க, ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி கதறி அழுதனர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கி அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காப்பகக் கதவுகளை உடைத்து, உள்ளே சிக்கி இருந்தவர்களை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். இருப்பினும், 9 பேர் உடல் கருகி பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →