Oct 17, 2025
Thisaigal NewsYouTube
உச்சக்கட்ட போராட்டத்தின் பின்னர் நேப்பாளத்தின் முதல் பெண் பிரதமர் நியமனம்
உலகச் செய்திகள்

உச்சக்கட்ட போராட்டத்தின் பின்னர் நேப்பாளத்தின் முதல் பெண் பிரதமர் நியமனம்

Share:

கட்மாண்டு, செப்டம்பர்.13-

நேப்பாளத்தின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.

நேப்பாள நாட்டின் முதல் பெண் பிரதமர் இவராவார். இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், இவரின் நியமனம் இடம் பெற்றுள்ளது.

சுஷிலா கார்கியைத் தேர்வு செய்ய ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர்.

இதன் விளைவாக பிரதமர் பதவி விலகினார். போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News