Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் வலுவான நில நடுக்கம்
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் வலுவான நில நடுக்கம்

Share:

மாஸ்கோ, செப்டம்பர்.19-

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 5-ம் தேதியன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.08 ஆக பதிவானது. கம்சட்கா பகுதியில் கடலுக்கு அடியில் 128 கி.மீ. ஆழத்தில் (80 மைல்) மையம் கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Related News