Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மருத்துவமனையுடன் தொடர்புடைய சுரங்கம்: ஆதார வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்
உலகச் செய்திகள்

மருத்துவமனையுடன் தொடர்புடைய சுரங்கம்: ஆதார வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

Share:

ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.ஆனால் பாலஸ்தீன அரசு,மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள்,ஹமாஸ் போன்றவை இந்த குற்றச்சாட்டை மறுத்தன.

ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து பதுங்கியுள்ள நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கூறி வந்த நிலையில்,

காசாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கபாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்ததற்கான ஆதாரமாக 6 நிமிட வீடியோ ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

Related News