தெஹ்ரான், ஜூன்.16-
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்துள்ள தாக்குதலில் இதுவரை 224 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும் பகுதியினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அது தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தொடங்கிய இந்தத் தாக்குதலில் பொதுமக்களின் குடியிருப்பை இலக்காகக் கொண்டது என்று ஈரான் குற்றஞ்சாட்டுகிறது.
ஈரானில் இராணுவ முகாமை நோக்கியே தங்கள் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் கூறுவது, முற்றிலும் பொய்யாகும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பகாடெய் கூறுகிறார்.








