Oct 30, 2025
Thisaigal NewsYouTube
டெக்ஸாசில் மழை வெள்ளம்: 120 பேர் பலி, 161 பேர் மாயம்
உலகச் செய்திகள்

டெக்ஸாசில் மழை வெள்ளம்: 120 பேர் பலி, 161 பேர் மாயம்

Share:

வாஷிங்டன், ஜூலை.12-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெக்சாஸின் மத்திய பகுதியில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னமும் பலரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை வெள்ள பாதிப்பால் 120 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 161 பேரைக் காணவில்லை. உயிரிழப்பை அடுத்து அதனைப் பேரிடராக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ள பாதிப்புகளை அவரும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். டிரம்ப் கள அதிகாரிகள் கூறிய விளக்கத்தைக் கேட்டறிந்தார்.

நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாநில அவசர காலச் செயல்பாட்டு மையத்தையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Related News